இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமாகினர். மயங்க் அகர்வால், ஷர்துல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லபுஷேனின் அபார சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள் க்ரீன் மற்றும் கேப்டன் பெய்னின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிம் பெய்ன் 50 ரன்களிலும், க்ரீன் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கம்மின்ஸ் 2 ரன்களில் வெளியேறினார். பின்னர், ஹாசில்வுட் 11 ரன்களிலும், லியோன் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்திருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் குவித்தது.
தமிழகச் சேர்ந்த இந்திய வீரர்களான நடராஜன், வாஷிங்டன் ஆகியோர் தங்கள் அறிமுகப் போட்டியில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!