[X] Close

லடாக்கும் பிரச்னை பகுதியாம்: சீனா பூச்சாண்டி

China-adds-Ladakh-to-dispute-with-India

சிக்கிமை அடுத்து லாடக் பகுதியையும் இந்தியாவுடனான பிரச்சனைக்குரிய பகுதி என்று சீனா தெரிவித்துள்ளது.

சிக்கிமில் உள்ள டோக்லாமில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்தியா மற்றும் பூடான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதையடுத்து எல்லையில் இந்தியாவும் சீனாவும் ராணுவத்தை குவித்துள்ளது. இந்தியா தன்னுடைய ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்ப அழைக்க வேண்டும் எனவும், அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும் சீனா தினமும் ஏதாவது ஓர் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சிக்கிம் மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இடம் கிடையாது என கூறியுள்ள சீனா, டோக்லாம் பகுதியில் இருந்து இந்தியா ராணுவத்தை திரும்ப பெறவேண்டும் என்று கூறியுள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான ஜின்குவா,
இந்தியா ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் நிலைமை மோசமடையும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் லாடக் பகுதியையும் இந்தியாவுடன் பிரச்சனைக்குரிய பகுதி என்று ஜின்குவா குறிப்பிடப்பட்டுள்ளது. லாடக் பகுதியிலும் இந்தியாவிடம் சீனா வாலாட்டி வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close