‘யாரோ ஒருமுறை சொன்னது போல் அமுமுகவை மன்னர்குடி மாஃபியா என்றுதான் நான் இன்னும் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார் குர்மூர்த்தி.
துக்ளக் இதழின் 51-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், துக்ளக் பத்திரிகை வாசகர் ஒருவர், திமுகவை வெல்ல பாஜக என்ன செயற்திட்டம் வைத்திருக்கிறது என்று எழுப்பிய கேள்விக்கு அந்த இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி, பதிலளித்தார். அப்போது, சசிகலாவை சாக்கடை நீர் என்று குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் தான் பேசியது என்ன என்பது குறித்து குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், ‘’கடந்த 1987-ம் ஆண்டு நான், அருண் ஷோரி உள்ளிட்டோர் சேர்ந்து ராஜீவ்காந்தி பற்றிய ஊழல் தகவல்களை சந்திரசுவாமி என்ற சாமியாரிடம் கேட்டு வாங்கினோம். அப்போது சிலர் அருண்ஷோரியிடம், தூய்மையான அரசியல் பற்றி பேசும் நீங்கள், சந்திரசுவாமியிடம் உதவி கேட்கிறீர்களே?’ என்று கேட்டனர். வீடு பற்றி எரிகிறது. கங்கை ஜலத்திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக் கூட வாரி வீச வேண்டும் என்று அருண் ஷோரி சொன்னதை மேற்கோள் காட்டிப் பேசினேன்.
நான் சந்திரசுவாமி சம்பவத்தை மேற்கோள் காட்டியபோது, அமுமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து திமுகவை எதிர்த்து நிற்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக என்ன செய்யும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று வாசகர்களிடம் துக்ளக் சொல்ல முடிவு செய்திருந்தது.
கடைசியாக வாசகர் சொன்னது போன்ற ஏதாவது நடந்தால், துக்ளக்கால் இப்போது சொல்ல முடியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத மாஃபியாவாக நான் கருதிய அமுமுகவை எப்படி ஆதரிக்க முடியும்?
யாரோ ஒருமுறை சொன்னதுபோல் அமுமுகவை மன்னார்குடி மாஃபியா என்றுதான் நான் இன்னும் கருதுகிறேன். அவர்கள் பாஜக-அதிமுக கூட்டணியின் ஒரு பகுதியாக மாறினாலும், சந்திரசாமியை சாக்கடையாகக் கருதியதுபோல நான் அவர்களை மாஃபியாக்களாக மட்டுமே கருதுவேன். மன்னார்குடி மாஃபியா மீண்டும் அதிமுகவுக்குள் வந்தால், திமுகவைபோல் அதிமுகவும் குடும்ப கட்சி ஆகிவிடும்.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்