இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. அதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏராளமான கட்டடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி பல நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
நிலநடுக்கம், மஜீனே பகுதிக்கு 6 கிலோ மீட்டர் வடகிழக்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசிய பேரிடர் முகமை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அச்சத்தினால் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக கூட அதே மாவட்டத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பல குடியிருப்புகளை பாதிக்க செய்துள்ளது. கடந்த 2018 இல் இதே தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?