Published : 13,Jan 2021 07:56 PM
அய்யோ ஒரே தமாசு! - விஹாரி பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த பாஜக அமைச்சரை கலாய்த்த அஸ்வின்

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 131 ஓவர் விளையாடி டிரா செய்தது. டிரா செய்தாலும் இது இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி என்றே இந்திய ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கொண்டாடினர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கிளாசிக் டெஸ்ட் போட்டியை பார்த்ததாக கூறினர்.
ஆனால், இந்தப் போட்டியில் விஹாரியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பாஜக தலைவருமான பபுல் சுப்ரியோ, ‘இந்தியாவின் வெற்றியை ஹனுமா விஹாரி களத்திலேயே கொலை செய்து புதைத்து விட்டார்’ என்றார்.
“7 ரன்களை எடுக்க 109 பந்துகள் விளையாடுவதெல்லாம் ரொம்ப மோசம். விஹாரி இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை மட்டுமல்லாது களத்திலேயே கிரிக்கெட்டையும் கொலை செய்துள்ளார். வெற்றியை ஒரு ஆப்ஷனாக கூட எடுத்துக் கொள்ளாமல் விளையாடியது படுபாதக செயலாகும். எனக்கு தெரியும் கிரிக்கெட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று” என அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த ட்வீட்டில் விஹாரியை பிஹாரி என சொல்லியிருந்தார் அவர்.
If Hanuma showed this little initiative of just standing& hitting the BAD BALLS for boundaries, India may hv got this historic win GIVEN that Pant did what no one expected•And, I am reiterating that it's ONLY the bad balls that cud hv been hit given Hanuma was set batman by then https://t.co/C8Z5YKOHCk
— Babul Supriyo (@SuPriyoBabul) January 11, 2021
ROFLMAX!! ??? pic.twitter.com/gIHpngYg3E
— Ashwin ?? (@ashwinravi99) January 13, 2021
இந்நிலையில் இந்த ட்வீட்டை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் “தரையில் விழுந்து புரண்டு சிரிக்கும் அளவிற்கு இது ஒரு நல்லகாமெடி” என இணைய மொழியில் சொல்லியுள்ளார்.
அதே போல ஹனுமா விஹாரியும் தனது பெயர் பிஹாரி இல்லை என்பதை சொல்லும் வகையில் ‘ஹனுமா விஹாரி’ என அந்த ட்வீட்டிற்கு பதில் கொடுத்துள்ளார். ரசிகர்களும் அமைச்சரின் ட்வீட்டுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.