ஈரோடு அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்தய பிறகும் அடமான பத்திரங்களை தர மறுத்ததால் டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உயிரிழப்பிற்குக் காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த வேலாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு. டிராவல்ஸ் நடத்தி வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி, பழனிச்சாமி ஆகியோர் நடத்தி வரும் நிதிநிறுவனத்தில் சொத்துக்களை அடமானம் வைத்து 1 லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
இந்நிலையில் அசல் மற்றும் வட்டியுடன் பணத்தை செலுத்திய பிறகும் பிரபுவின் பத்திரங்கள் திருப்பி தரப்படவில்லை. இதனால் மனமுடைந்த பிரபு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பிரபுவின் மரணத்திற்கு காரணமான நிதிநிறுவன உரிமையாளர்களை கைது செய்ய கோரி பிரபுவின் உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுப்ட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஈரோடு நகர போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளி்த்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?