Published : 10,Jan 2021 11:13 AM
117 ஆண்டுகள் பழமை.. புதுக்கோட்டையில் விடுதியாக மாறிய பாரம்பரிய வீடு!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நட்சத்திர விடுதிகள் கூட பாதிப்பை சந்தித்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி கிராமத்தில் உள்ள பாரம்பரிய விடுதி வரவேற்பை பெற்றுள்ளது. 117 ஆண்டு பழமை மிக்க இந்த வீடு, தங்கும் விடுதியாக செயல்பட்டுவரும் நிலையில், கொரோனா காலத்திலும், சுற்றுலாப்பயணிகள் இங்கு விரும்பிவருகிறார்கள். நட்சத்திர விடுதிகளும், ரிசார்டுகளும் தராத ஒரு அனுபவத்தை இந்த இடம் தருவதாக சுற்றுலாப்பயணிகள் கூறுகிறார்கள். கர்நாடகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து தங்கிச்செல்கிறார்கள்.