[X] Close

இந்தியாவில் ஜனவரி 11 அன்று வெளியாகும் ஒன்பிளஸ் பேண்ட் ஃபிட்னெஸ் டிரேக்கர்!

டெக்னாலஜி

OnePlus-Band-Fitness-Tracker-going-to-launch-on-January-11

வரும் திங்கள்கிழமை (ஜன.11) அன்று ஒன்பிளஸ் பேண்ட் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இப்போதைக்கு இந்த பேண்ட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கடைகளிலும் கிடைப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம். 


Advertisement


Advertisement

இந்த பேண்ட் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிடாமல் உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை 2499 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் டைம் ஹார்ட் ரேட் சென்சார், ஸ்லீப் மானிட்டரிங் பியூச்சரும் இந்த பேண்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதன் திரை 1.1 இன்ச் இருக்கலாம். 

13 வகையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை டிரக் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை  நீடித்து நிற்கும் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. சந்தையில் இந்த விலை கேட்டகிரி கொண்ட பேண்டுடன் இந்த பேண்ட் எந்த அளவிற்கு போட்டி போடுகிறது என்பது வெளிவந்த பிறகே தெரியும். 


Advertisement

Advertisement
[X] Close