புதியதலைமுறை செய்தி எதிரொலி - மாற்றுத்திறனாளி மாணவருக்கு கிடைத்த வாகன உதவி!

புதியதலைமுறை செய்தி எதிரொலி - மாற்றுத்திறனாளி மாணவருக்கு கிடைத்த வாகன உதவி!
புதியதலைமுறை செய்தி எதிரொலி - மாற்றுத்திறனாளி மாணவருக்கு கிடைத்த வாகன உதவி!

புதிய தலைமுறை செய்தி ஒளிபரப்பியதன்  எதிரொலியாக மாற்றுத்திறனாளி மாணவர் யோகேஸ்வரனுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார். 

 மாற்றுத்திறனாளி மாணவர் யோகேஸ்வரன் மூன்று சக்கர சைக்கிள் இல்லாமல் கஷ்டப்பட்டதை புதிய தலைமுறை செய்தி ஒளிப்பரப்பியது. இதனையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உடனடியாக மாற்றுத்திறனாளி  மாவட்ட நல அலுவலர் ரவிசந்திரனுக்கு உத்தரவிட்டு முதற்கட்டமாக மூன்று சக்கர சைக்கிள் அவர்களுக்கு வீடு தேடிச் சென்று கொடுத்து உதவினார்.

     மேலும், யோகேஸ்வரனின் தாய் இளவரசிக்கு பார்வை குறைவு உள்ளதால் மருத்துவ சிகிச்சை பெற்று அவருக்கும் விரைவில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு இரண்டு சக்கர வாகனம் கொடுக்க நடவடிக்கை எடுத்து தரப்படும். அவர்களுக்கான உதவித் தொகைகளும் தற்போது கிடைத்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும்’ என்று ரவிச்சந்திரன் உறுதியளித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com