Published : 15,Jul 2017 01:01 PM

கல்லூரி உரிமம் வாங்கித் தருவதாக ரூ.8 கோடி மோசடி

college-license--fraud-8-crore

மருத்துவ கல்லூரி உரிமம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே மணமை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள மருத்துவக் கல்லூரிக்கு உரிமம் பெற இந்திய மருத்துவ கவுன்சிலி‌ல் முருகேசன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். அந்த கல்லூரிக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி குஜராத்தைச் சேர்ந்த யுகேஷ்குமார் குப்தா என்பவர் முருகேசனிடம் 8 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில், யுகேஷ் குமார் குப்தா அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்