Published : 09,Jan 2021 06:53 PM

சாவியை காரிலேயே விட்டுச்சென்ற நபர் - காருடன் மனைவியையும் திருடிச்சென்ற திருடர்கள்!

Robbers-drive-off-car-with-wife-who-left-key-inside-in-Punjab

சாவியை காரிலேயே விட்டுச்சென்றதால் காருடன் மனைவியையும் திருடர்கள் திருடிச்சென்ற சம்பவம் பஞ்சாபில் நடந்திருக்கிறது.

வியாழக்கிழமை சண்டிகருக்கு அருகிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் தேரா பஸ்ஸி என்ற இடத்தில் கணவனும் மனைவியும் தன் குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் செலுத்த சென்றபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் ராஜிவ் சந்த். இவர் தனது மனைவி ரித்துவுடன் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் தனது குழந்தைகள் பயிலும் பள்ளிக்கு கல்விக் கட்டணம் செலுத்த தன்னுடைய டாடா டியகோ காரில் சென்றிருக்கிறார். ரித்துவை காரிலேயே உட்கார வைத்துவிட்டு ராஜிவ் மட்டும் சென்றதால் சாவியை காரிலேயே விட்டுச் சென்றிருக்கிறார்.

image

இதை நோட்டமிட்ட மாஸ்க் அணியாத இரண்டு நபர்கள் திடீரென காரில் ஏறியிருக்கின்றனர். ரித்து உள்ளே இருந்ததை கவனித்ததால் திருடர்களில் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்ததும், மற்றொருவர் பின்புறம் ஏறி, ரித்து சத்தம்போடுவதற்கு முன்பே அவர் முகத்தை மூடியிருக்கிறார். அவர்கள் காரை நெடுஞ்சாலைக்கு ஓட்டிச்சென்று, கிட்டத்தட்ட 5 கிமீ தூரம் சென்றதும் அம்பாலா டோல் பிளாசா அருகே ரித்துவை கீழே தள்ளிவிட்டு காரைமட்டும் ஓட்டிச் சென்றுவிட்டனர்.

பிறகு அந்த தம்பதியர் காவல்நிலையத்திற்குச் சென்று இதுகுறித்து புகார் கொடுத்திருக்கின்றனர். கடத்தல்காரர்களை பிடிப்பதற்கான முயற்சிகளை எடுத்துவருவாதாகவும், திருடர்கள் சென்ற வழியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை பரிசோதித்து வருவதாகவும் போலீஸார் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்குக் கொடுத்த தகவலில் கூறியிருக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்