பீட்டாவை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு

பீட்டாவை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு
பீட்டாவை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு

பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.‌

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் காரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிம‌ன்றத்தில் மு‌றையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர் மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாததற்கு பீட்டா அமைப்பே காரணம் என்று கூறி, தனது முறையீட்டை அவசர வழக்காக எடுத்து விசாரித்து, பீட்டாவைத் தடை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ் கலாசாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் எதிராகச் செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா எம்பி சுப்பிரமணியன் சாமி, விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். வழக்கறிஞர் சூர்யபிரகாசத்தின் முறையீட்டை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்க மறுத்த நீதிபதி, அதை வழக்காக தொடரும் பட்சத்தில் நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com