[X] Close

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு.. அதிமுக பொதுக்குழு... முக்கியச் செய்திகள் சில.!

இந்தியா

today-headlines-of-puthiyathalaimurai-09012021

இலங்கையில் உயிர் நீத்த தமிழர்களின் நினைவாக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு, இரவாக இடிப்பு. கோத்தபய அரசை கண்டித்து மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால் பதற்றம்.


Advertisement

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம். தமிழினத்தின் வீரச்சுவடுகளை முற்றாக சிதைக்கும் முயற்சி என வேதனை.

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை. நாடு முழுவதும் ஒத்திகை நடைபெற்றுள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு.


Advertisement

image

கொரோனா தடுப்பூசி செலுத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி. தடுப்பூசி விநியோகம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை.

பொங்கல் பண்டிகைக்கு 16,221 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 11 முதல் 13ஆம் தேதி வரை மற்றும் 17 முதல் 19ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கம்


Advertisement

சென்னையில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு, செயற்குழு. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்போருடன் மட்டுமே கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு.

கடலூரில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள். தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி விடிய, விடிய போராட்டம். ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

image

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கும் உத்தரவை ரத்து செய்தது தமிழக அரசு. நூறு சதவீத அனுமதிக்கு பதிலாக கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி.

நாகையில் பெண் கூலித் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரிக்கு குற்றவாளிகள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விலையில்லா ஆடு வழங்க ஊழியர்கள் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியானது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் உறுதி.

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

image

அணு ஆயுதங்களை ஏவ அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கலாம் என சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரிக்கை. அமெரிக்காவின் முப்படை தளபதிகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 60 கடைகளில் தீ விபத்து. தீப்பிடித்து எரிந்த 60 கடைகள்


Advertisement

Advertisement
[X] Close