காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஸ்டாலின்தான் முடிவு செய்வார் -மணிசங்கர் அய்யர்

காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஸ்டாலின்தான் முடிவு செய்வார் -மணிசங்கர் அய்யர்
காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஸ்டாலின்தான் முடிவு செய்வார் -மணிசங்கர் அய்யர்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை சீட் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்திருக்கிறார்.

பாஜக, அதிமுக கூட்டணியில் இடங்கள் மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சைகள் எழுப்பிவரும் சூழ்நிலையில், பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்திருக்கிறார். அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை சீட் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருக்கிறார்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை இடங்கள் வேண்டும் என்பதை கேட்கக்கூடிய நிலையில் காங்கிரஸ் இருந்தாலும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மு.க. ஸ்டாலின்தான் இதுகுறித்து முடிவு செய்வார் என்பதை அவர் தற்போது தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com