Published : 15,Jul 2017 11:05 AM

ரயில்களில் கட்டணத் தள்ளுபடி செய்ய ஆலோசனை

Discount-pay-fees-for-trains

ரயில்களில் அதிகளவில் இருக்கைகள் காலியாக உள்ள நேரங்களில் கட்டணத் தள்ளுபடி வழங்குவது குறித்து ரயில்வேத் துறை பரிசீலித்து ‌வருகிறது.

ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் பெரும்பாலும் 100 சதவிகித இருக்கைகள் நிரம்புவதில்லை. அச்சமயங்களில் கடைசி நேரத்தில் வரும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் சில ரயில்களில் சோதனை ரீதியில் செ‌யல்படுத்தப்பட்டு வரு‌வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் கட்டணத்துடன் சுவிதா என்ற பெயரில் ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் பண்டிகை நாட்கள், வார இறுதி விடுமுறைகளில் தான் ரயில்கள் முழுவதுமாக நிரம்பும். மற்ற நேரங்களில் ஒவ்வொரு ரயிலிலும் பாதி இருக்கைகள் காலியாகவே இருக்கும். இதனால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதால், இழப்பை சமாளிக்கும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவர ரயில்வே அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்