[X] Close

தடை அதை உடை: தோனி வெளியிட்ட ’தல’ போட்டோ!

MS-Dhoni-celebrates-Chennai-Super-Kings----return-to-IPL-in-unique-way

ஐபிஎல் போட்டியில் தடை நீக்கப்பட்டதால் ஆரவாரமாக களமிறங்க இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில் தோனி வெளியிட்டுள்ள, தல புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சூதாட்ட சர்ச்சை காரணமாக, ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடை முடிந்துவிட்டதால் இப்போது மீண்டும் களமிறங்குகிறது இரண்டு அணிகளும். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் டிவிட்டரில், ‘வந்துட்டோம்னு சொல்லு... திரும்ப வந்துட்டோம்னு சொல்லு...விசில் போடு’ என்று தங்கள் மறுபிரவேசத்தை மகிழ்ச்சியுடன் பதிவிட்டது. ரசிகர்களும் அதை வரவேற்று கருத்துகளை பதிவு செய்தனர்.

சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி, கடந்த இரு சீசனில் புனே அணிக்காக விளையாடினார். அவரை மீண்டும் இழுக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் ’தல’ என்று எழுதப்பட்ட, சென்னை சூப்பர் கிங்ஸுக்கான மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தோனி. அதில் அவர் முகத்தைக் காட்டவில்லை. இந்தப் புகைப்படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.


Advertisement

இதே புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ’சிங்கம் விசில் போட தயாராகிவிட்டது. யாரென்று கணியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close