[X] Close

உடல் குறித்த விழிப்புணர்வு காலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்த கபீர் சிங் பட நடிகை!

இந்தியா,சினிமா

Kabir-Singh-Movie-Shahid-Kapoor-s-co-actor-Vanita-Kharat-poses-nude-for-a-Calendar-photoshoot-of-Body-Positivity-Movement

அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் ஷாஹித் கபூருடன் நடித்திருந்தவர் நடிகை வனிதா கராத். அந்த படத்தில் ஷாஹித் கபூரின் வீட்டில் வேலை செய்யும் புஷ்பா கதாப்பத்திரத்தில் நடித்து அப்ளாஸை அள்ளியிருப்பார் அவர். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் டாக்காகி உள்ளார் அவர். 

View this post on Instagram

A post shared by @vanitakharat19


Advertisement

புது வருடமான 2021 காலண்டருக்காக அவர் கொடுத்த போஸ் தான் அதற்கு காரணம். BODY POSITIVITY என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் இந்த போட்டோ ஷூட்டை அவர் நடத்தியுள்ளார். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த படங்களை அவர் சமூக வலைத்தளத்திலும் ஷேர் செய்துள்ளார். அது வைரலாகியும் வருகிறது. 

“எனது திறமையை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என் ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலை பார்த்தும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் இது தான் நான்” என அந்த போஸ்டிற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார் அவர். மராத்தி நடிகையான அவர் அதிகளவிலான மராத்தி சினிமா மற்றும் நாடகங்களில் நடித்தும் உள்ளார். 

View this post on Instagram

A post shared by @vanitakharat19


Advertisement


Advertisement

Advertisement
[X] Close