[X] Close

நோயாளிகளிடம் கட்டாய பணம் வசூல்? - பழனி மருத்துவமனையில் அவலம்

crime-in-govt-hospital

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் செவிலியர்கள் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பழனி மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழனி அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் முறையான படுக்கை வசதிகள் இல்லாததால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய நோயாளிகளிடம் அங்குள்ள செவிலியர்கள் 100 ரூபாய் பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்கும் நோயளிகளுக்கு மட்டும் படுக்கை வசதிகள் செய்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுக்காத நோயாளிகளை நடைபாதையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்துவருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தட்டிக்கேட்டால், கேட்கப்படும் நேயாளி புறக்கணிக்கப்படுவதாகவும், வார்ட் பாய் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பொதுமக்களை மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close