முதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து!

முதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து!
முதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து!

தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற இரு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

வல்லநாடு அருகே முதலமைச்சரின் கார் அணிவகுப்பு சென்றபோது ஏராளமான கட்சியினர் தங்களது வாகனங்களில் தொடர்ந்தனர். அப்போது சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் கார் ஒன்று மோதி நின்றது.

இதனால் பின்னால் வந்த மற்றொரு கார் விபத்தில் சிக்கிய கார் மீது மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையை மாடு ஒன்று திடீரென கடந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jvCw-zpD5xE" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com