Published : 15,Jul 2017 03:09 AM

காதல் திருமணம் செய்து 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

girl-suicide-in-selam

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்த மூன்றே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகளும், சேடபட்டி பகுதியை சேர்ந்த பசுபதி என்பவரும் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டனர். ஆரம்பத்தில் இருவரும் ஒற்றுமையாக இருந்த நிலையில் சில நாட்களிலே அவர்களது காதல் கசந்து, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணின் பெற்றோர், தனது மகள் இறப்புக்கு அவரது கணவர் பசுபதி, மாமியார் தான் காரணம் என தெரிவித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், பசுபதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்