
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட எல்லையில் ஊடுருவ திட்டமிட்ட பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் சுந்தர்பனி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ராணுவத்தினர் முழுவீச்சில் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.