[X] Close

'வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்'-முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு

mk-Stalin-wrote-a-letter-calling-for-the-repeal-of-all-3-agricultural-laws

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாபை அடுத்து கேரள சட்டப்பேரயிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தனது கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையோடு டெல்லியில் திடமாக போராடி வரும் விவசாயிகளுடன் தமிழகம் இணைந்து நின்று அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் விருப்பத்தை பிரதிபலிப்பதில் திமுக உறுதியாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

 மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இதற்காக தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேட்டுக் கொள்வதாக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


Advertisement

Advertisement
[X] Close