டிக்கெட் புக்கிங்.. உணவு ஆர்டர்... எல்லாத்துக்கும் ஒரே செயலி

டிக்கெட் புக்கிங்.. உணவு ஆர்டர்... எல்லாத்துக்கும் ஒரே செயலி
டிக்கெட் புக்கிங்.. உணவு ஆர்டர்... எல்லாத்துக்கும் ஒரே செயலி

ரயில்வே பயணிகளின் வெவ்வேறு தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ஏதுவாக ஒருங்கிணைந்த மொபைல் செயலி (Mobile app) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகம் செய்து வைத்துள்ள இந்த செயலியில், ரயில்வே பயணிகளின் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண முடியும். ஏற்கனவே, ரயில்வேயில் டிக்கெட் புக்கிங், ரயில்களின் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக ஒவ்வொன்றிருக்கும் பிரத்யேகமாக செயலி உள்ளது.

இந்நிலையில் பல்வேறு தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் விதமாக "ரயில் சாரிதி" (Rail SAARTHI) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தேவைக்கும் அதற்கான பிரத்யேக செயலியை தேடிக்கொண்டு நேரத்தை வீணடிக்க தேவையில்லை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ரயில்வே டிக்கெட் புக்கிங், உணவு ஆர்டர் என எல்லாவற்றையும் ஒரே செயலியில் பதிவு செய்து பயணிகள் பயன் அடையமுடியும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com