Published : 31,Dec 2020 10:23 AM
நாளை வெளியாகிறது விஜய் சேதுபதி மகள் நடிப்பில் உருவாகியுள்ள வெப் ஃபிலிமின் ட்ரைலர்!

விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் என்ற வெப் ஃபிலிமின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது.
முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை கதையான குயின் வெப் தொடரில் ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். அவர்களை தொடர்ந்து பாபி சிம்ஹா, நித்யா மேனன், மீனா ஆகியோரும் வெப் தொடர்களில் நடித்து இருக்கிறார்கள். சூர்யா, சத்யராஜ், காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் வெப் தொடரில் நடிக்கிறார். அதுமட்டுமில்லால் விஜய்சேதுபதி கைவசம் மாஸ்டர், லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களும் உள்ளன. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ என்ற ஒரு மணி நேர வெப் ஃபிலிமின் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி புரொடெக்ஷன்ஸ், கார்த்திக் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரெஜினா, ஸ்ரீஜா விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் இந்த வெப் ஃபிலிம் உருவாகி உள்ளது.
Happy to announce @vsp_productions 's maiden One hour web film titled as #Mughizh#முகிழ்
— VijaySethupathi (@VijaySethuOffl) December 30, 2020
Trailer from 1-1-2021 @ 5 PM.
⭐ing #SreejaVijaysethupathi@ReginaCassandra@VijaySethuOffl
Directed by @karthik_films@DoPsathya@revaamusic@R_Govindaraj@proyuvraajpic.twitter.com/TAicqCkV49