Published : 30,Dec 2020 08:49 PM
3வது டெஸ்ட் போட்டிக்கு தயார்: இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா...!

14 நாட்கள் கோரண்டைன் முடிந்த நிலையில் ரோகித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின்போது காயமடைந்தார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. முழு உடல்தகுதி பெற்றால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
Look who's joined the squad in Melbourne ?
— BCCI (@BCCI) December 30, 2020
A warm welcome for @ImRo45 as he joins the team ?#TeamIndia#AUSvINDpic.twitter.com/uw49uPkDvR
டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தனது உடல் தகுதியை நிரூபித்த ரோகித் சர்மா, கடந்த 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றார். அதையடுத்து அங்கு கொரோனா தடுப்பு நடைமுறையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
இந்நிலையில், ரோகித் சர்மா, 14 நாள் தனிமைக்குப் பிறகு, மெல்போர்னில் இந்திய அணியோடு இணைந்துள்ளார். அவருக்கு இந்திய அணி வீரர்கள் வரவேற்பு தெரிவித்தனர். 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ந்தேதி சிட்னியில் நடைபெற உள்ள நிலையில் அதில் ரோகித் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இல்லாத நிலையில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று கருதப்படுகிறது.