கொரோனா தடுப்பூசிகளில் பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக எழுந்த விவகாரத்தால், இஸ்லாமியர்களிடையே விவாதம் நிலவுகிறது. இதுகுறித்தும், தடுப்பூசி தயாரிப்பு குறித்த விளக்கமும் இதோ...
கொரோனா தடுப்பூசிகளில் பன்றி கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது என்ற சர்ச்சை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைப்புகளிடையே விவாவத்திற்கு வழிவகுத்திருக்கிறது. காரணம், இஸ்லாம் மதத்தில் பின்பற்றப்படும் ஹலால் மற்றும் ஹராம் நடைமுறைதான். பொதுவாகக் கூறவேண்டுமென்றால், ஹலால் முறை என்பது அந்த மதத்தைச் சார்ந்தவர் எவற்றையெல்லாம் பின்பற்றலாம், எதையெல்லாம் கடைபிடிக்கலாம் என்பதை குறிப்பது. ஹராம் என்பது அந்த மதத்தவர் எவற்றையெல்லாம் பயன்படுத்த, பின்பற்றக்கூடாது, எவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டியவை என்பதைக் குறிப்பது.
இஸ்லாமிய மதப்படி பன்றி, நாய், பூனை, குரங்கு போன்ற விலங்குகள் ஹராம் முறையின்கீழ் வரும். ஒரு மனிதன் தவிர்க்கமுடியாத சூழலில் இருக்கும்போது மட்டுமே இவற்றின் இறைச்சியை எடுத்துக்கொள்வது கருத்தில்கொள்ளப்படும். மற்றபடி அனுமதிக்கப்பட மாட்டாது என்கிறார்கள்.
ஆனால், பொதுவாக தடுப்பூசிகளை நீண்டநாட்கள் இருக்கும்படி பதப்படுத்த அவற்றில் பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் தற்போது இஸ்லாம் மத பழைமைவாதிகளுக்கு பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்களில் ஒரு தரப்பினர் கொரோனா தடுப்பூசி மருந்துகளை பத்திரப்படுத்த, அவற்றில் பன்றிக் கொழுப்பு சேர்க்கப்படுவதாகவும், எனவே அது தங்கள் மதத்திற்கு புறம்பானது என்றும் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இஸ்லாமிய மதகுரு மஹ்மூத் மத்னி 'இந்தியா டிவி'-யிடம் கூறுகையில், "கொரோனா தடுப்பூசிகளில் பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் விவரங்களை தெரிவித்தால் நன்றாயிருக்கும். அதேசமயம் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை" என்று கூறியிருக்கிறார். மேலும் ஃபைசர், ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசிகள் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து ஃபைசர், மாடர்னா மற்றும் ஆஸ்ட்ரா செனேகா தடுப்பூசி செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், "கொரோனா தடுப்பூசிகளில் பன்றியிலிருந்து எந்த பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை" என்று தெரிவித்தனர். ஆனால், கமாலயா ஆராய்ச்சி நிறுவனம், ஜான்சன் & ஜான்சன், நோவாவாக்ஸ், சினோவாக், சினோஃபார்ம், கான்சினோ பயாலாஜிக்ஸ் மற்றும் பெக்டாப் போன்ற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளில் பன்றிக் கொழுப்பு ஜெலட்டின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.
டிசம்பர் 23-ம் தேதி, ஐக்கிய அரபு நாடுகளின் இஸ்லாமிய அமைப்புகள், கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்தது. மேலும், மக்களின் உயிர் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, ஒருவேளை அவற்றில் பன்றிக் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்கூட அவை ஊசிமூலம் செலுத்தப்படுவதால் அவற்றை செலுத்திக்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. இதற்கு இந்தியா உட்பட பல நாடுகளிலுள்ள மதகுருக்களும், பழைமைவாதிகளும் முஸ்லிம் மதத்திற்கு எதிரானது எனக் கூறி, எதிர்ப்பு தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான சினோவேக் தடுப்பூசியில் பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தடுப்பூசிகள் வாங்கவுள்ள இந்தோனேஷியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் அமைப்புகள், அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ராஸா அகாடமியின் பொது செயலாளர் சயத் நூரி, "முஸ்லிம் மதத்தில் தடைசெய்யப்பட்டவைகளில் ஒன்று பன்றி. பன்றிக் கொழுப்பு ஜெலட்டின் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.
அதேபோல், இந்தியாவின் அனைத்து இந்திய ஜமியாதுல் உலேமா அமைப்பு உட்பட, ஜமாத் உலேமா அஹ்லே சுன்னத், அனைத்து இந்திய மஸ்ஜித் ஆணையம் போன்ற 9 அமைப்புகளின் தலைவர்கள் நிபுணர்களை அழைத்து, கொரோனா தடுப்பூசி ஹலால் முறையின்கீழ் வருமா அல்லது ஹராம் முறையின்கீழ் வருமா என்பது குறித்து கலந்தாலோசித்துள்ளனர். அதன்படி, இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூக உறுப்பினர்களிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix