[X] Close

டெல்லி: மாநகராட்சி கூட்டத்தில் பாஜக - ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்.. செருப்புகள் வீச்சு!

இந்தியா

Delhi-BJP-AAP-Councillors-clash-hurl-footwear-amid-meet-video-surfaces

டெல்லியில் மாநகராட்சி கூட்டத்தில் நடந்த செருப்பு வீச்சு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..

டெல்லியில் பாஜக அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் மோசடி நடந்து உள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி பேசியிருந்தார்.

முதல்வரின் இப்பேச்சு திங்கட்கிழமை அன்று கிழக்கு டெல்லி மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் எதிரொலித்தது. இதன் காரணமாக பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி, இரு கட்சி கவுன்சிலர்களில் சிலர் செருப்புகளை கழற்றி ஒருவர்மீது ஒருவர் வீசத்தொடங்கினர்.


Advertisement

இச்சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மோகினி ஜீன்வால் மற்றும் மனோஜ் குமார் தியாகி ஆகியோர் 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close