Published : 14,Jul 2017 02:10 PM

தனியார் பள்ளிக் கட்டணம்: புதிய மசோதா தாக்கல்

New-draft-about-school-fees-filed-by-TN-minister-sengottaiyan-in-Assembly

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்த பின்னரே, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுத் தலைவரை தேர்வு செய்ய வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தாக்கல் செய்தார்.

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த அரசு அமைக்கும் குழுவுக்கான தலைவரை தமிழக அரசு நேரடியாகத் தேர்ந்தெடுப்பது நடைமுறையாக இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு புதிய திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய பின்னரே கட்டண நிர்ணயக்குழுத் தலைவரை தேர்வு செய்ய முடியும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்