உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டம்.. திமுக தேர்தல் அறிக்கை தகவல்.. சில முக்கியச் செய்திகள்!

உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டம்.. திமுக தேர்தல் அறிக்கை தகவல்.. சில முக்கியச் செய்திகள்!
உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டம்.. திமுக தேர்தல் அறிக்கை தகவல்.. சில முக்கியச் செய்திகள்!

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ சிறப்புக் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்து முடிவெடுக்க திட்டம்.

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. அவர்களோடு தொடர்பில் இருந்த 12 பேருக்கு வைரஸ் பரவி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது மயிலாடுதுறை. காணொளி மூலம் நிர்வாக செயல்பாடுகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஐதராபாத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழலைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தில் பிற மாவட்ட பக்தர்கள் பங்கேற்க உயர் நீதிமன்றம் அனுமதி. பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்றும் உத்தரவு.

அதிமுகவை உடைக்க நினைத்த சில புல்லுருவிகளின் முயற்சி தவிடுபொடியாகிவிட்டதாக முதல்வர் பழனிசாமி பேச்சு. நலத்திட்டங்களை பெறவே மத்திய அரசை ஆதரிப்பதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்.

கூட்டணி ஆட்சி, அமைச்சர் பதவி என்று யாரும் எங்களிடம் வந்துவிட வேண்டாம் என கே.பி முனுசாமி பேச்சு. தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டதாக கூறுவதாக தேசிய கட்சிகள் மீது பாய்ச்சல்.

விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டுவதே நோக்கம் என்றும் பேச்சு.

நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. விவசாய விளைபொருள் போக்குவரத்துக்கான நூறாவது பிரத்யேக ரயிலையும் தொடங்கி வைக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 100 ரன்னுக்கு மேல் முன்னிலை பெற்றது. ரஹானே 112 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் அரை சதம் அடித்தார் ஜடேஜா.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com