“தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3இல் மதுரை வாருங்கள்” - மு.க. அழகிரி அழைப்பு

“தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3இல் மதுரை வாருங்கள்” - மு.க. அழகிரி அழைப்பு

“தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3இல் மதுரை வாருங்கள்” - மு.க. அழகிரி அழைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3 ஆம் தேதி மதுரை வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருங்கால அரசியல் நடவடிக்கை பற்றி ஆதரவாளர்களுடன் ஜனவரி 3 ஆம் தேதி ஆலோசனை நடத்துவதாகவும் அதனால் ஆதரவாளர்கள் ஜனவரி 3ஆம் தேதி மதுரைக்கு வரவேண்டும் எனவும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். ஜனவரி 3ல் பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவேன் எனவும் அவர்கள் சொன்னால் கட்சி தொடங்குவேன் எனவும் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். மேலும், “திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. திமுக தலைமையிடம் இருந்து இந்த அழைப்பும் வரவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com