[X] Close

“சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும்... அப்புறம் வரட்டும்” - சீமான் ஆவேசம்

சினிமா,தமிழ்நாடு,தேர்தல் களம்

Let-Vijay-give-voice-to-Surya-size-says-seeman

குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும் அப்புறம் அரசியலுக்கு வரட்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


Advertisement

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? தகுதிகளை வளர்த்துக்கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால் வரட்டும்.

எனது வேலையில் நான் மனநிறைவு பெறுகிறேன். மக்கள் என்னை அங்கீகரிக்கவில்லை என வருத்தப்படவில்லை. குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசிலுக்கு வரட்டும்” என்றார்.


Advertisement

image

முன்னதாக ரஜினி, கமல் போன்றோருக்கு விழும் அடியில் இனி விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என சீமான் தெரிவித்திருந்தார். அதற்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close