[X] Close

சொத்துக்கணக்கை காட்ட நான் தயார்; கமல் தயாரா? : அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

தமிழ்நாடு,தேர்தல் களம்

Is-Kamal-ready-to-show-assets--ask-kadambur-raju

சொத்துக்கணக்கை காட்ட தான் தயாராக இருப்பதாகவும், அதேபோல் கமல்ஹாசன் தயாராக உள்ளாரா என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

இதுகுறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ, “எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட நான் தயார். கமல் தயாரா? மனசாட்சிப்படி கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்த கணக்கு சொல்லட்டும். நாங்களும் சொல்லத் தயார்” என்றார்.

மேலும், “எம்.ஜி.ஆர் பற்றி பேச சீமான் போன்றோருக்கு அருகதை இல்லை. தரத்துடன் பேசுபவர்களுக்கு பதில் கூறலாம் நாட்டில் இருக்கிறதை காட்டி கொள்வதற்காக ரகளை பண்ணுவதற்காக வாய்க்கு வந்தபடி பேசுபவருக்கு பதில் சொல்வது முறையாக இருக்காது. எம்ஜிஆரை பழித்து பேசிய யாரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. எம்ஜிஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.


Advertisement

மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான்;  கமல் நன்றி | Kamal thanks voters as MNM enters 3rd year - hindutamil.in

முன்னதாக, எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுப்போம் என்ற ரஜினி, கமலுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்.ஜி.ஆர் என்ன நல்லாட்சி தந்தார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.


Advertisement

Advertisement
[X] Close