முதல் டெஸ்டில் வீழ்ச்சி, அனுபவ வீரர்கள் கோலி மற்றும் ஷமி ஆஸ்திரேலிய தொடருக்கான அணியிலிருந்து விலகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஹீரோக்கள் அவதரிக்க போகும் நேரம் இது என தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண். தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
“முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டை இழந்தது ஆக்ஷன் ரீபிளே போல தான் இருந்தது. இருப்பினும் அந்த ஒரு இன்னிங்க்ஸை வைத்து வீரர்களின் திறனை முடிவு செய்துவிட முடியாது. இவர்கள் உலகின் பல இடங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் இந்தியாவுக்காக அடுத்த மூன்று போட்டிகளில் விளையாட உள்ள இளம் வீரர்கள் ஹீரோவாக அவதரிக்க உள்ளனர். நிச்சயம் எஞ்சியுள்ள ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை இந்திய வீரர்கள் கொடுப்பார்கள்” என லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் இந்தியா ஆஸ்திரேலியாவில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவும் என சொல்லியுள்ள நிலையில் லக்ஷ்மணின் கணிப்பு இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்