[X] Close

அடுத்து மாதம் திருமணம்; மருத்துவமனை வளாகத்தில் காவலர் மாரடைப்பால் துடிதுடித்து மரணம்

தமிழ்நாடு

Dharmapuri-A-policeman-died-of-a-heart-attack-while-getting-married-next-month

தருமபுரியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் 26 வயதே ஆன இரண்டாம் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்குச் சென்ற காவலர் ராஜசேகர், விபத்தில் படுகாயமடைந்த தனது நெருங்கிய உறவினரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.


Advertisement

image

உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் காவலர் ராஜசேகர் நடந்து செல்லும் காட்சிகளும் அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்து நெஞ்சு வல்கியால் துடிக்கும் காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்த அவரை உடனடியாக அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்குள் தூக்கிச் சென்றனர். ஆனால், ராஜசேகர் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

26 வயதேயான ராஜசேகர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close