Published : 14,Jul 2017 07:43 AM
ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்: எய்ம்ஸில் ஆபரேஷன்

ஒடிசாவில் தலைகள் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் மேல் சிகிச்சைகாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டம் மிலிபாடா பகுதியில் பிறந்த இரட்டை குழந்தைகளின் தலைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிறந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அந்த இரட்டை குழந்தைகளின் மேல் சிகிச்சைக்கு உதவ வேண்டி அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இணைந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை செய்து பிரிக்க ஒடிசா மாநில அரசு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. தற்போது இந்த குழந்தைகளுக்கு அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.