சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா - தென்னாப்ரிக்காவில் வெறொரு வடிவில் கொரோனா

சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா - தென்னாப்ரிக்காவில் வெறொரு வடிவில் கொரோனா
சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா - தென்னாப்ரிக்காவில் வெறொரு வடிவில் கொரோனா

பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. முந்தைய கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் இந்த தொற்றால் பல்வேறு நாடுகள் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வேறு ஒரு வடிவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாற்றமடைந்த வைரசை விட இது வீரியமானது என்றும் வேகமாக பரவக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் உருமாறியுள்ள கொரோனா தொற்று அங்கிருந்து பிரிட்டன் வந்தவர்களுக்கு பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 17வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா B-117 இல்லை என்பது கண்டறியப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com