''பந்துகளை பறக்கவிட்டார்'' - தோனியை முதன்முறை பார்த்த அனுபவம் குறித்து பேசிய கம்பீர்!

''பந்துகளை பறக்கவிட்டார்'' - தோனியை முதன்முறை பார்த்த அனுபவம் குறித்து பேசிய கம்பீர்!
''பந்துகளை பறக்கவிட்டார்'' - தோனியை முதன்முறை பார்த்த அனுபவம் குறித்து பேசிய கம்பீர்!

வேறு எந்த இந்திய விக்கெட் கீப்பரிடமும் இல்லாத ஒரு ஸ்பெஷல் தோனியிடம் இருந்ததாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்

சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஃபினிஷர், சிறந்த கேப்டன், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ்மேன் என அனைத்திலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை சொல்லலாம். அந்த அளவிற்கு தனது ஆட்டத்தின் மூலம் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் அவர். கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் அவர் தொடர்பான செய்திகளும், பேச்சுகளும் இணையத்தில் அடிபட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. ஏன்? மைதானங்களில் கூட வீரர்கள் தோனியின் பெயரை உச்சரித்துக்கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் தோனியை மிஸ் செய்கிறேன் என பேனர் காட்டிய ரசிகர்களிடம் நானும் தான் எனக் கோலி கூறியது, 'தோனி அளவுக்கு வேகம் இல்லை தானே' ஸ்டெம்பிங்கை மிஸ் செய்து விட்டு தவானிடம் கேட்ட ஆஸி கேப்டன் என தோனியின் பெயரை எங்கையாவது யாராவது உச்சரித்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.

இந்நிலையில், தோனி கிரிக்கெட்டில் கால் பதித்து 16 வருடங்கள் ஆகிவிட்டன. #16YearsofMSDhoni என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த நேரத்தில் வேறு எந்த இந்திய விக்கெட் கீப்பரிடமும் இல்லாத ஒரு ஸ்பெஷல் தோனியிடம் இருந்ததாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கம்பீர், தோனியை முதன்முறை பார்க்கும்போது தான் உணர்ந்த உணர்வையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில்,

''நாங்கள் இந்தியா A அணிக்காக கென்யா, ஜிம்பாப்பே ஆகிய நாடுகளுக்குச் சென்றோம். பாகிஸ்தான் A, கென்யா நாடுகளுடன் மூன்று நாடுகள் கொண்ட போட்டிகளில் விளையாடினோம். நமக்கு தெரிந்த தோனியை போலவே அவர் பந்துகளை நாலாபுறலும் பறக்க விட்டார். இந்திய அணியில் பல சிறந்த விக்கெட் கீப்பர்கள் இருந்துள்ளனர். ஆனால் தோனியைப் போல 100மீ சிக்ஸர்களை பறக்கவிடும் அதிரடி பேட்ஸ்மேன்களாக யாரும் இல்லை. அவர் தனித்துவமானவர், அதனை வைத்தே அவர் சாதித்தார்'' என தெரிவித்தார்.

2004ம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது தனது சர்வதேச போட்டிகளை தொடங்கினார் தோனி. ஒருவருடம் முன்னதாக, அதாவது 2003ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார் கம்பீர். இருவரும் இணைந்து இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். குறிப்பாக 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோனி-கம்பீர் கூட்டணி 109 ரன்களை குவித்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com