[X] Close

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்: மத்திய அரசு உறுதி

We-will-not-allow-China-s-involvement-in-the-Kashmir-issue---Government

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீடு தேவையில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்காற்றி, இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்த சீனா ஆர்வத்துடன் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறி இருந்தார். இந்த நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  ’காஷ்மீர் பிரச்னை, இந்தியாவும் பாகிஸ்தானும் சம்பந்தப்பட்டது. அதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய தீவிரவாதம்தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் அந்த மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.  பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஏவப்படும் எல்லை தாண்டிய தீவிரவாதம், இந்தியா மட்டுமல்லாது பக்கத்து நாடுகளின் அமைதிக்கும் உறுதித் தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. காஷ்மீர் உட்பட அனைத்து விவகாரம் குறித்தும் பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் அதற்கு முன்பாக தீவிரவாத தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதில் பிற நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close