Published : 22,Dec 2020 07:15 PM
“கோலி இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு” - ஸ்டீவ் ஸ்மித்

கோலி இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வரும் ஜனவரியில் முதல் குழந்தை பிறக்க உள்ள காரணத்தினால் அவருக்கு விடுப்பு கொடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். அதனால் அவர் ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார். இந்நிலையில் கோலி இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்புதான் என சொல்லியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.
“அசத்தலான ஆஸ்திரேலிய பவுலிங் யூனிட்டை முதல் இன்னிங்ஸில் கூலாக சமாளித்தார் கோலி. அது அவரது அசாத்திய பேட்டிங் திறனின் வெளிப்பாடு. இந்திய அணியை இக்கட்டான நிலையில் விட்டு செல்கின்றோம் என்ற ஏக்கம் அவருக்கு இருந்தாலும் அவரது முடிவை நான் வரவேற்கிறேன். முதல் போட்டி முடிந்த பிறகு பாதுகாப்பான பயணத்துடன் ஊர் திரும்ப விடை கொடுத்தேன். குழந்தை விஷயத்தில் அனைத்தும் நல்லபடியாக இருக்கும் என நான் நம்புவதாக அவரிடம் தெரிவித்தேன்” என ஸ்மித் தெரிவித்தார்.