Published : 22,Dec 2020 07:24 PM

’யூ டர்ன்’ புகழ் பட இயக்குநரின் வெப் சீரிஸில் நடிக்கும் அமலா பால்!

Amala-Paul-Teams-Up-With-U-Turn-Fame-Director-For-A-Web-Series

’யூ டர்ன்’ பட இயக்குநர் பவன் குமார் இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகை அமலா பால் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான யூ டர்ன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை செய்தது. தமிழிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது. நடிகை சமந்தா, ஆதி நடித்திருந்தனர். திகில் நிறைந்த பேய் படமான யூடர்ன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார் இயக்குநர் பவன் குமார். இப்போது அவர் இயக்கவுள்ள புதிய  வெப் சீரிஸான ’குடி யெடமைதே’ ( Kudi yedamaithe )   வெப் சீரிஸில் அமலா பால் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த 8 பகுதிகள் கொண்ட ஒரிஜினல் தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாவதாக சொல்லப்படுகிறது.

image

இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும்  டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது. இதுதவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் Netflix ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்