[X] Close

ஏ.ஆர்.ரகுமான் இப்படி ஏமாத்திட்டாரே... டிவிட்டரில் ரசிகர்கள் மோதல்!

AR-Rahman-for-performing-Tamil-songs-and-not-enough-in-Hindi

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ்ப் பாடல்களாகப் பாடி, இந்தி ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாக டிவிட்டரில் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இசை நிகழ்ச்சிகளில் தமிழ், இந்திப் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடுவது வழக்கம். ஆனால், தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடியதாக சில ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.
’தமிழ் பாடல்களை மட்டும்தான் பாடுவார் என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். அவர் தமிழிலேயே பேசிக்கொண்டிருந்தார். இது ஏமாற்றத்தை தந்தது. இனி அவர் இசை நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன்’ என்று சிலரும் ‘முதன்முதலாக ஒரு தமிழ் இசை நிகழ்ச்சிக்கு சென்று ஆர்வமே இல்லாமல் சகித்துக் கொண்டிருந்தேன்’ என்று சில ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

இதே போல தமிழ் ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர். ’மற்ற மொழியில் பாடுவதை ஒரு மணி நேரம் உங்களால் (இந்தி ரசிகர்கள்) சகித்துக்கொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ளுங்கள், இந்தி திணிப்பை நாங்கள் எப்படி பொறுக்க முடியும் என்று?’என்று சில ரசிகர்களும் ’ஏ.ஆர்.ரகுமான் தமிழர். இது தமிழ் இசை நிகழ்ச்சி. தமிழ் சினிமாதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பிறகெப்படி அவர் இந்தி பாடல்களை பாடுவார்?’ என்றும் கேள்விகேட்டுள்ளனர். 


Advertisement

ரசிகர்களின் டிவிட்டர் சண்டை குறித்து ஏ.ஆர்.ரகுமான் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. 


Advertisement

Advertisement
[X] Close