[X] Close

தாஜ்மஹாலில் தனுஷ்! வைரலான புகைப்படம்

சினிமா

Akshay-Kumar-Sara-Ali-Khan-Dhanush-to-shoot-at-Taj-Mahal-for-Atrangi-Re

’அட்ராங்கி ரே’வில் நடித்துவரும் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் மூவரும் தாஜ்மஹாலில் எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான  ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில்  அறிமுகமானார். கிட்டதட்ட அது ஒரு மாஸான படம் தான். தனுஷிற்கு ஏற்ற கதாபாத்திரம். அந்த படத்தின் மூலம் தனுஷிற்கு பாலிவுட்டில் நல்ல அறிமுகம் கிடைத்தது. அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார்.

image


Advertisement

அமிதாப் உடன் போட்டி போட்டு தன்னுடைய நடிப்புக் கலையை வெளிப்படுத்தினார். தற்போது, மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் அட்ராங்கி ரே படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்துள்ளார்.  

image

கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் ஆரம்பிக்கப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவால் தடைப்பட்டுப்போனது. சமீபத்தில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்துள்ளதால், மீண்டும் ’அட்ராங்கி ரே’  மதுரை, டெல்லி என தொடர்ந்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது, இதன் படப்பிடிப்புகள் தாஜ்மஹாலில் நடைபெற்று வருவதையொட்டி நடிகை சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்‌ஷய் குமார் கையில் ரோஜாவுடன் இருக்கும் புகைப்படத்தையும், அவருடன் தாஜ்மஹாலில் இருக்கும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

image

அவரைத்தொடர்ந்து அக்‌ஷய் குமாரும் கையில் ரோஜாவோடு தாஜ்ஹால் வாசலில் ரோஜாவை வைத்து ‘வாவ் தாஜ்’ என்ற வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தனுஷ் நேற்று மாலை தாஜ்மஹாலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். தாஜ்மஹாலில் தனுஷ் இருக்கும், இந்த புகைப்படத்திற்கு இதுவரை 5 லட்சம் பேர் லைக்ஸ்களை குவித்துள்ளனர்.  

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close