பாஜக எம்.பி. சவுமித்ர கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிஷன்பூர் மக்களவை எம்.பி. சவுமித்ர கான், கடந்த ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சவுமித்ர கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார்.
சுஜாதா கான் பாஜக உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்றவர் ஆவார். இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுஜாதா மோண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகி உள்ளார்.
இதுகுறித்து சுஜாதா மோண்டல் கான் கூறுகையில், "நான் சுவாசிக்க விரும்புகிறேன். எனக்கு மரியாதை வேண்டும். நான் ஒரு திறமையான கட்சியின் தலைவராக இருக்க விரும்புகிறேன். எனது அன்பான தீதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். பாஜகவில் புதிதாக சேர்க்கப்பட்ட, தவறான மற்றும் ஊழல் தலைவர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
எனது கணவர் ஒரு நாள் உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன். அவர் ஒரு நாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார் என நம்புகிறேன்’’ என்றார்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்