Published : 14,Jul 2017 04:59 AM

தனியார் பள்ளிக் கட்டண மசோதாவில் இன்று மாற்றம்

Private-school-bill-changes-today

தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். 
தனியார் பள்ளிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இதையடுத்து தனியார் பள்ளி கட்டணத்தை வரைமுறைப்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டது.கடந்த 2009ஆம் ஆண்டு, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின்படி, புதிய சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து 2013 முதல் 2016 வரை, சிங்காரவேலன் தலைமையில் கட்டண நிர்ணய குழு செயல்பட்டது. நடப்பாண்டில் மாசிலாமணி தலைமையில் கட்டண நிர்ணய குழு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனியார் கட்டண நிர்ணய சட்டத்தில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா, இன்று கூடும் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்கிறார். பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்