”பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு; அதில், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது” - கமல்

”பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு; அதில், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது” - கமல்
”பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு; அதில், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது” - கமல்

”பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு; அதில், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பரப்புரையின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் பரப்புரையை தொடங்கியுள்ள கமல்ஹாசன், இன்று காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் பேசினார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தை நான் தொடங்கிய போது இது தேறாது, நான் தேறமாட்டேன் என்று சொன்னவர்கள் இப்போது என்னைப் பார்த்து பயந்து கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வந்த பிறகு பலருக்கும் தூக்கம் போய் விட்டது. தனிப்பட்ட என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. என்னை சிலர் எதிரிகளாக நினைக்கிறார்கள். ஆனால் நான் அவர்களை எதிரிகளாகவே நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். தமிழகமும் அப்படித்தான் அவர்களைப் பார்க்கிறது” என்றார்.

பிக்பாஸ் குறித்த அதிமுகவினரின் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது. பிக்பாஸ் மூலம் மக்களை மகிழ்விக்கிறேன். பிக்பாஸில் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால் அது அவர்களது கண்களுக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும், “வாக்குக்கு பணம் தரப்போகிறார்கள். மக்களின் பணத்தை எடுத்துக் கொண்டு அதையே மக்களிடம் திருப்பித் தருகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மக்களின் பணம் 10 மடங்குக்கு மேல் எடுத்துக்கொண்டு ஒரு சதவிகிதத்தை தான் உங்களுக்கு தருகிறார்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் சமையல் செய்வது,துணி துவைப்பது,வீட்டை கழுவி சுத்தம் செய்வது என எத்தனையோ பணிகளை செய்வதால் அவர்களுக்கும் அரசு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

என்னிடம் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் உள்ளன.வேலை தேடும் இளைஞர்களை வேலை தரக்கூடிய முதலாளிகளாக மாற்றுவோம். எனது வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கி விட்டது” என்றார் கமல்ஹாசன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com