[X] Close

டிச. 25 முதல் 27 வரை டோல்கேட்களில் கட்டணம் செலுத்தா போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு

இந்தியா

Farmers-to-halt-toll-collection-on-highways-in-Haryana-from-Dec-25-to-27

வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகிற  25-ம் தேதி முதல்  27-ம் தேதி  வரை ஹரியானாவில் உள்ள அனைத்து டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் செல்வது என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, சந்தைகள் அமைப்பு போன்றவற்றைக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, வரும் 25-ம் தேதி முதல்  27-ம் தேதி  வரை ஹரியானா மாநிலத்திலுள்ள அனைத்து டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லப் போவதாக விவசாய தலைவர் ஜக்ஜீத் சிங் தலேவாலா தெரிவித்துள்ளார்.


Advertisement

மேலும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து எதிர்ப்பு இடங்களிலும் விவசாயிகள் திங்கள்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்குவார்கள் என்று ஸ்வராஜ் இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.

டிசம்பர் 23 ஆம் தேதி ஆர்ப்பாட்டக்காரர்கள் விவசாயிகள் தினத்தை கொண்டாடுவார்கள் என்றும் மக்கள் தங்கள் ஒற்றுமையைக் காட்ட மதிய உணவு சமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close