
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பன்னிரெண்டு ஆண்டுகளில் முதல்முறையாக சதம் பதிவு செய்ய தவறிய ஆண்டாக கடந்துள்ளது 2020.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனான கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் ஆதிக்கம் செலுத்துபவர். பேட்டோடு களத்தில் இறங்கினால் ரன் மழை பொழிவது வாடிக்கை.
ஆனால் இந்த ஆண்டு (2020) கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெட்டிலும் சதம் பதிவு செய்யாமல் நிறைவு செய்துள்ளார். கடந்த 2008-இல் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தார். அந்த ஆண்டு ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் சதம் பதிவு செய்யவில்லை. 2009 தொடங்கி 2019 வரை 70 சதங்களை பதிவு செய்துள்ள கோலி இந்த ஆண்டு தான் சதம் பதிவு செய்ய தவறியுள்ளார். மொத்தமாக கோலி 21 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2020இல் விளையாடியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியாவுடன் பாக்சிங் டே டெஸ்டில் வரும் 26 தொடங்கி 30 வரை விளையாடினாலும் கோலி இந்தியா திரும்புவதால் அந்த போட்டியை அவர் மிஸ் செய்துள்ளார். கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.