[X] Close

சசிகலா சமையலறை விவகாரத்தை கிளப்பிய டிஐஜி ரூபாவின் பின்னணி இதுதான்!

sasikala-kitchen-issue-stirred-is-the-background-of-DIG-roopa-

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள்  வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சிறைத்துறை  டிஐஜி ரூபா காவலர்களுக்கான குடியரசுத் தலைவர்  விருதைப் பெற்றவர். கண்டிப்பான நடவடிக்கைகள்  மூலம் ஏற்கெனவே மக்கள் மத்தியில்  அறிமுகமானவர்.
காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய  காலத்தில் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த  உமாபாரதியை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  கைது செய்ததன் மூலம் ரூபாவின் பெயர் வெளியில்  தெரியவந்தது. பெங்களூருவில் காவல் துணை  ஆணையராக பணியாற்றிய காலத்தில்  அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு  அதிகாரபூர்வமற்ற முறையில் பாதுகாப்பு வழங்கிய  காவலர்களை திரும்பப் பெறும் நடவடிக்கையை  மேற்கொண்டவர். மாவட்ட ஆயுதப் படைப்பிரிவின்  இணை ஆணையராக பணியாற்றிய காலத்தில்  கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு  பாதுகாப்பு வழங்க அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்ட  காவல்துறை வாகனங்களைத் திரும்பப் பெறும்  நடவடிக்கையையும் ரூபா மேற்கொண்டார். 
சமீபத்தில் மைசூரு குடகு நாடாளுமன்ற உறுப்பினர்  பிரதாப் சின்ஹாவுடன் டிவிட்டரில் வார்த்தை  மோதல்களில் ஈடுபட்டதன் மூலம் செய்திகளில்  ரூபாவின் பெயர் மீண்டும் வலம் வந்தது. தனது  நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்ட  ரூபா, இரண்டாயிரமாவது ஆண்டில் ஐபிஎஸ் பணிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹைதராபாத்தில் உள்ள  தேசிய காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சியை  முடித்த அவர் மட்டுமே கர்நாடாகாவில்  பணியமர்த்தப்பட்டார். துப்பாக்கி சுடுதலில்  வல்லவரான அவர், ஹைதராபாத்தில் பயிற்சி  பெறும்போது பல்வேறு விருதுகளை வென்றவர்.  சிறப்பாக பணியாற்றும் காவல்துறை  அதிகாரிகளுக்கான குடியரசுத் தலைவர் விருதை  கடந்த 2016ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று  பெற்றவர். எல்லாவற்றிற்கு மேலாக பரதநாட்டியத்தில்  தேர்ச்சி பெற்றவர் என்பதோடு ஹிந்துஸ்தானி  சாஸ்திரிய சங்கீதமும் பயின்றவர்.

Related Tags : எடியூரப்பா

Advertisement

Advertisement
[X] Close