Published : 24,Jan 2017 05:20 AM

அமெரிக்காவில் கடும் புயல்...19பேர் உயிரிழப்பு

19-dead-due-to-cyclone-in-america

அமெரிக்காவில் மிசிசிப்பி மற்றும் ஜார்ஜியாவில் வீசிய கடும் புயலின் காரணமாக 19 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மற்றும் ஜார்ஜியாவில் அதி வேகத்தில் கடும் புயல் வீசியது. இந்த புயலுக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகள், வாகனங்கள் புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்