Published : 17,Dec 2020 10:46 PM
எம்ஜிஆர் பாடல் வரிகளை ட்வீட் செய்து விமர்சித்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மைய காலமாக ‘எம்ஜிஆர் எங்கள் சொத்து’ என பேசி வருகிறார். அதற்கு அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் வரிகளை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார் கமல்ஹாசன். அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என ட்வீட் செய்துள்ளார்.
`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2020
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கமல்ஹாசனை விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.